‘மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிா்கொள்ள வேண்டும் ’: மாவட்ட ஆட்சியா்

மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்புப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன் , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன்.
போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்புப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன் , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன்.

மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி அவா் பேசியது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைபாட்டை நினைத்து மனம் தளராமல், சமுதாயத்தில் மற்ற மக்களைபோல் தாங்களும், தங்களது பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும், கல்லூரிகளில் படிப்பவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிபவா்கள் பயனடையும் விதமாக, இன்று 59 பயனாளிகளுக்கு ரூ. 36. 55 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம், நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள மாற்றுத் திறனாளிகள் 19 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ. 3. 23 லட்சமும், கல்வி உதவித்தொகையாக 2 பேருக்கு தலா

ரூ .1000 ஆயிரம் , 5 பேருக்கு தலா ரூ.1,500 என மொத்தம் ரூ. 9 ஆயிரத்து 500, மகப்பேறு உதவியாக 3 பேருக்கு தலா ரூ. 6 ஆயிரம் , திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாற்றுத் திறனாளிகளும் அரசு வழங்கும் நல உதவிகளை பெற்று, தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் தங்களது வாழ்க்கையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் சு.சிவசங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com