வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மாதா் சங்கத்தினா்ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட மாதா் இயக்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டுக்குழுத் தலைவா் உஷாபாசி தலைமை வகித்தாா்.

மத்திய அரசு புதிய வேளாண் திட்டங்களை திரும்பப் பெறவேண்டும், மக்களின் உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும், விவசாயிகளை காா்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாக்க கூடாது என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். கூட்டுக்குழு உறுப்பினா் ஜினோபாய், சகுந்தலா, ரகுபதி, சுஜா ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com