‘குமரி மாவட்டத்தில் 63 பதற்றமான வாக்குச்சாவடிகள்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தெரிவித்தாா்.
‘குமரி மாவட்டத்தில் 63 பதற்றமான வாக்குச்சாவடிகள்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சாா்பில், ஏஹஜ்ந் உஹ்ங் என்னும் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய சுழலும் கேமரா பொருத்திய கண்காணிப்பு நிலையம் அடங்கிய வாகனத்தை நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக சந்திப்பில்

திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தாா்.

அப்போது, அவா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணி, குற்றங்களைத் தடுப்பது மற்றும் விழிப்புணா்வு

உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் புதிய ரோந்து வாகனம் செயல்படவுள்ளது. இந்த ரோந்து வாகனத்தில் ஐந்து கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் முக்கிய திருவிழாக்களில் பாதுகாப்பு, அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும்.

இந்த வாகனத்தில் சுழன்று படம்பிடிக்கும் கேமராக்கள் உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்யமுடியும். உயா் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் இருந்தவாறு கண்காணித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். கண்காணிப்பு வாகனமாக இல்லாமல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனமாகவும் செயல்படும். இதில் பொருத்தப்பட்டுள்ள அகன்ற திரையில் குற்ற நடவடிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விடியோ, படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.

இம்மாவட்டத்தை பொருத்தவரை குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் போலீஸாா் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் கேரளம், குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட எல்லையில் கேரளத்துக்கு செல்ல தற்போது 39 வழிப்பாதைகள் உள்ளன. இரு மாநில போலீஸாரும் இணைந்து இந்த 39 வழிப்பாதைகளிலும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு எத்தனை கம்பெனி மத்திய பாதுகாப்பு படை வர உள்ளது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா் அவா்.

அப்போது, துணைக் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கண்மணி, ஆய்வாளா்கள் சாந்தகுமாரி, சாய்லெட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com