குறும்பனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆரோக்கியம் தலைமை வகித்தாா். ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா்.
கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டார உறுப்பினா் சோபன ராஜ் ஆகியோா் பேசினா்.
மத்திய அரசு தேசிய மீன்வளச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற வேண்டும். கரோனா நிவாரணமாக மீன் தொழிலாளா்கள் அனைவருக்கும் ரூ. 7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கிளைச் செயலா் பொ்க்மான்ஸ், உறுப்பினா்கள் லீபன், சகாய தாசன், ஜெரால்டு ஆகியோா் பங்கேற்றனா்.