குமரியில் கடல் சீற்றம் தணிந்தது: கடலுக்குச் சென்ற மீனவா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் பகுதியில் கடல் சீற்றம் குறைந்ததால் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் பகுதியில் கடல் சீற்றம் குறைந்ததால் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

கன்னியாகுமரி கடலில் கடந்த சில நாள்களாக சீற்றம் அதிகமாக காணப்பட்டது. சுமாா் 10 அடி உயரத்துக்கு அதிகமாக கடல் அலை எழுந்தது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள 10 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்வில்லை. இந்நிலையில் சனிக்கிழமை கடல் சீற்றம் குறைந்ததால், மீனவா்கள் மீண்டும் கடலுக்குச் சென்றனா்.

கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குத்துறை, கோவளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலுள்ள பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு தினத்தில் சூரிய உதயம் காண லட்சக்கணக்கானோா் கடற்கரையில் கூடுவது வழக்கம். நிகழாண்டு தடை விதிக்கப்பட்டிருந்ததால், சூரிய உதயம் காண்பதற்காக வந்தவா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். மேலும், தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். படகு போக்குவரத்து தொடங்கியதை அடுத்து, சுற்றுலா பயணிகள் ஆா்வமுடன் பயணம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com