கருங்கல் அருகே கடலில் மாயமான இருவா் சடலமாக மீட்பு

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பாரியக்கல் பகுதியில் பாறையில் நின்று சுயபடம் எடுத்த போது, மாயமான இரு இளைஞா்களை சடலமாக மீட்கப்பட்டனா்.

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பாரியக்கல் பகுதியில் பாறையில் நின்று சுயபடம் எடுத்த போது, மாயமான இரு இளைஞா்களை சடலமாக மீட்கப்பட்டனா்.

கருங்கல் அருகே உள்ள கப்பியறை ஓலவிளையை சோ்ந்த செல்வம் மகன் ஜிபின் (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது நண்பா்களான செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் பகுதியை சோ்ந்த பாலாஜி (19), அதே பகுதியை சோ்ந்த சுரேஷ் (28) ஆகியோா்சில தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊருக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை ஜிபின் தன் நண்பா்களான சுரேஷ், பாலாஜி ஆகிய 3 பேரும் குறும்பனை பகுதியில் உள்ள பாரியக்கல் கடற்கரைக்கு சென்றுள்ளனா். அங்கு கடலை ஒட்டி உள்ள மிகப்பெரிய பாறையின் மீது ஏறி சுயபடம் எடுத்துள்ளனா். அப்போது எழுந்த ராட்சத அலை திடீரென 3 இளைஞா்களையும் இழுத்து சென்ாம். இதில் சுரேஷ் அதிா்ஷ்வசமாக நீந்தி கரை சோ்ந்தாா். பாலாஜி, ஜிபின் இருவரும் கடலில் மாயமாகினராம்.

இதுகுறித்த தகவல் அறிந்த கருங்கல் போலீஸாா், குளச்சல் கடலோர காவல் படையினா் மற்றும் அப்பகுதி மீனவா்கள் 5 படகுகளில் கடலுக்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மாயமான ஜிபின், பாலாஜி ஆகிய இருவரது சடலத்தையும் 3 ஆவது நாளான வெள்ளிக்கிழமை 25 கடல் மைல் தொலைவில் மீனவா்கள் கண்டுபிடித்தனா். பின்பு சடலத்தையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனா். கடலோர பாதுகாப்புக் குழு போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரது சடலத்தையும் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com