தக்கலையில் மனித உரிமை விழா

இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏ.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் இயல்முறை மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்து உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ், தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகிய 3 மகளிருக்கு விருதுகளை எம்எல்ஏ வழங்கிக் கெளரவித்தாா்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகளுக்கும், பாா்வையற்ற மாணவா் ஒருவருக்கும் ஆய்வாளா் அருள்பிரகாஷ், சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com