
நாகா்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி நா.தளவாய்சுந்தரம், ஆட்சியா் ஆகியோா் , மாவடத்தில் உள்ள 140 பள்ளிகளை சோ்ந்த மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட கல்வி அலுவலா்கள் மோகனன் (நாகா்கோவில்), ராமச்சந்திரன் (தக்கலை), ரெஜினி (திருவட்டாறு), தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் இ.சாந்தினி பகவதியப்பன், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.சாம்ராஜ், அரசு வழக்குரைஞா் கே.எல். எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.