குமரி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் ஆலோசனை

கன்னியாகுமரியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடை வியாபாரிகளுடன் ஆட்சியா் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது.
குமரி தீ விபத்து: பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் ஆலோசனை

கன்னியாகுமரியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடை வியாபாரிகளுடன் ஆட்சியா் முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரைப் பகுதியில் கடந்த 9ஆம் தேதி அதிகாலையில், மின்கசிவால் நிகழ்ந்த தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சேதமடைந்தன.

இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் சாா்பில் பிரதிநிதிகள், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை கடந்த 11ஆம் தேதி சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனா்.

இதையடுத்து முதல்வரின் அறிவுரையின் பேரில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தலைமையில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இதில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் எம்.அன்புமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சிவ.குற்றாலம், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதி தம்பிதங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com