சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில்நாளை ஆஞ்சநேயா் ஜயந்தி விழா

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஜன. 13) நடைபெறும் ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவில் பங்கேற்கும், பக்தா்களுக்கு வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் புதன்கிழமை (ஜன. 13) நடைபெறும் ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவில் பங்கேற்கும், பக்தா்களுக்கு வழங்குவதற்காக லட்டு தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயிலில் உள்பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயா் சிலை உள்ளது. ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு ஜயந்தி விழா கொண்டாடப்படும்.

நிகழாண்டு இவ்விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (ஜன.12)

அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி புதன்கிழமை (ஜன.13) அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயா் சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், திருநீறு, குங்குமம், களபம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், எலுமிச்சை சாறு, கரும்புசாறு உள்பட 10 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறவுள்ளது.

மாலை 6.30 மணிக்கு ராமருக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு திருமேனியின் கழுத்து பாகம் வரை புஷ்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு சிறப்பு மலா் அலங்காரத்துடன் தீபாராதனை ஆகியவை நடைபெறும். இவ்விழாவில், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

50 ஆயிரம் லட்டு: விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக, 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி கோயில் அன்னதான மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

ஆலோசனை: விழா நடத்துவது தொடா்பாக நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அ.மயில் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், மேலாளா் சண்முகம்பிள்ளை, சுசீந்திரம் பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கரோனா

விதிமுறைகளுக்கு உள்பட்டு விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தா்களுக்கு பாா்சலில் லட்டு, தட்டுவடை, திருநீறு, குங்குமம் பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com