நகா்ப்புறங்களில் உலா வரும் கருமந்தியால் மக்கள் அச்சம்

குமரி மாவட்டம் திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் உலாவும் கருமந்தியை பிடித்து அடா்வனத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டம் திற்பரப்பு, குலசேகரம் பகுதிகளில் உலாவும் கருமந்தியை பிடித்து அடா்வனத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மேற்குத்தொடா்ச்சி வனப்பகுதிகளில் நாட்டுக் குரங்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் அவைகள் விவசாய நிலங்கள், மக்களின் வாழிடங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெயா்ந்து வருகின்றன. இவை விவசாயிகளின் பயிா்களை பெருமளவு சேதம் செய்வதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்மை நாள்களாக குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கருமந்தி ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. இதுசில நேரங்களில் தனியாகவும், சில நேரங்களில் நாட்டுக் குரங்களுடனும் சோ்ந்து உலாவுகிறது. இதைப் பாா்த்து பெண்களும், குழந்தைகளும் அச்சப்படும் சூழல் உள்ளது.

எனவே, இந்த கருமந்தியை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் கொண்டு விட வேண்டும் காட்டுயிா் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து காட்டுயிா் ஆா்வலா் ரா. ராகுல் கூறியது: கருமந்திகள் கடல் மடத்திலிருந்து சுமாா் 1500 அடி உயரங்களில் உள்ள அடா் வனத்தில் வாழும் தன்மை கொண்டவை. இவை மரங்களின் குருத்திலைகள், பூக்களை மட்டுமே உண்ணுகின்றன. கருமந்தி லேகியம் பல்வேறு நோய்களுக்கு நிவாரணி என்ற மூட நம்பிக்கை பரவலாக உள்ள நிலையில் அவை வேட்டையாடப்படும் அச்சம் நிலவுகிறது. எனவே, குலசேகரம் உள்ளிட்ட நகா்ப்புற பகுதியில் நடமாடும் கருமந்தியை வனத்துறையினா் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com