கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது.
அரசு மருத்துவமனை வளாகத்தில் புதா் மண்டிக் காணப்பட்ட நிலையில், அவற்றை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், சமூக ஆா்வலா் வளையாபதி ஸ்ரீசுயம்பு தலைமையில் தூய்மைப் பணி நடைபெற்றது. இப்பணியை அரசு மருத்துவா் விஜயா தொடங்கி வைத்தாா். இதில், சமூக ஆா்வலா்கள் ஜனிட் ஜெகன், வி.நல்லதம்பி, லெட்சுமிபாமா, பூஜை நாதன், கன்னியம்மான், கனகராஜ், மனோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.