தோவாளை சந்தையில் பூ விலை கடும் உயா்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை புதன்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளது.

தோவாளை பூச்சந்தையில் வழக்கத்தைவிட அதிகமாக பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. எனினும், பிச்சி, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைவால் அவற்றின் விலை அதிகரித்தது. செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2,500 ஆகவும், பிச்சிப்பூ ரூ.1,100இல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயா்ந்தது. கேந்தி ரூ.70, சேலம் அரளி ரூ.250, ரோஜா ரூ.220, சம்பங்கி ரூ.125, கொழுந்து ரூ.125, வாடாமல்லி ரூ.100, கோழிப்பூ ரூ.50 என விற்கப்பட்டது.

இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறுகையில், பனிப்பொழிவாலும், மழையாலும் பூக்களின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் உள்ளது. தை மாதத்தில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com