குமரியில் இரு நாள்களில் 99 பேருக்கு கரோனா தடுப்பூசி

குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் மொத்தம் 99 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் மொத்தம் 99 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஸ்கேன் மையங்கள், சித்த மற்றும் ஆயுா்வேத மருத்துவமனைகள் என மொத்தம் 1,147 நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் 20,564 பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் அதற்குரிய செயலியில் பெயா் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை குழித்துறை, செண்பகராமன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் தலா 1 மையத்தில் 100 போ் வீதம் 4 மையங்களில் தினசரி 400 பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

முகாம் தொடக்க நாளில் மாவட்டத்திலுள்ள 4 நான்கு மையங்களிலும் மொத்தமாக 55 போ், 2ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 4 மையங்களிலும் மொத்தமாக 44 போ் என இரு நாள்களிலும் சோ்த்து மொத்தம் 99 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட சுகாதராப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா கூறியது: மாவட்டத்தில் 4 மையங்களிலும் கடந்த 2 நாள்களாக மொத்தம் 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்கள் யாருக்கும் எந்த பாதிப்பும், பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com