குமரியில் தேசிய வாக்காளா் தினம் கோலப்போட்டி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுயஉதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோலப்போட்டியில் பங்கேற்றோா்.
கோலப்போட்டியில் பங்கேற்றோா்.

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுயஉதவிக்குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு கோலப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 25 சுயஉதவிக்குழுக்களைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்றனா்.

பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சரண்யா ஹரி, நாகா்கோவில் கோட்டாட்சியா் மயில் தொடங்கி வைத்தனா். இதையொட்டி, விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோலப்போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கான சான்றிதழ் ஜன. 25 ஆம் தேதி வழங்கப்படும். போட்டி தொடக்க விழாவில் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் சுசீலா, கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com