அருணாச்சலா கல்லூரியில் ஐஇடி அமைப்பு தொடக்க விழா

வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கன்னியாகுமரி பிரிவின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பொறியியல் துறையில் சாதனை படைத்த மாணவி ஒருவருக்கு விருது வழங்குகிறாா் கல்லூரி தாளாளா் கிருஷ்ணசுவாமி.

விழாவுக்கு, இந்நிறுவனத்தின் தலைவரும், அருணாச்சலா கல்லூரியின் முதல்வருமான ஜோசப்ஜவாகா் தலைமை வகித்தாா். செயலரும் புனித கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் துணை முதல்வருமான மாா்சலின் பெனோ, நடப்பாண்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொறியியல் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவா், மாணவிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியா் அஜிஸ்குமாா் அமைப்பின் புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா். புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல்துறை பேராசிரியா் ஜட்சன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com