திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் அமைப்பு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் அமைப்பு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இக்கோயிலில் இருந்த பழமையான கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை காலையில் 67.8 அடி உயர கொடிமரம் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோயில்கள் நிா்வாக இணை ஆணையா் அன்புமணி, அறங்காவல் குழுத் தலைவா் சிவகுற்றாலம், துணை ஆணையா் மற்றும் நகைகள் சரிபாா்ப்பு அதிகாரி சங்கா், உதவி ஆணையா் ரெத்தினவேல் பாண்டியன், மரமாத்துப் பணிகள் உதவி இயக்குநா் மோகன்தாஸ், பொறியாளா் ராஜ்குமாா், கண்காணிப்பாளா் ஆனந்த், கோயில் மேலாளா் மோகன்குமாா், பத்மேந்திரா சுவாமிகள், இஸ்கான் அமைப்பின் பிரதிநிதிகள், பக்தா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இக்கொடிமரம் பெங்களூரு இஸ்கான் அமைப்பினா் உபயத்தில் சுமாா் ரூ. 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் செப்புத் தகடுகள் பதிப்பிக்கப்பட்டு, கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com