500 பேருக்கு கரோனா நிவாரண உதவி
By DIN | Published On : 27th January 2021 08:09 AM | Last Updated : 27th January 2021 08:09 AM | அ+அ அ- |

பெண்ணுக்கு நிவாரண உதவி வழங்குகிறாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, மாடுகட்டி விளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் வழங்கினாா். அப்போது, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.