காப்புக்காடு டாஸ்மாக் கடையைமாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டம் அருகே காப்புக்காடு சந்திப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி அனைத்து கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் கடையை மாற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
டாஸ்மாக் கடையை மாற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே காப்புக்காடு சந்திப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி அனைத்து கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்புக்காடு சந்திப்பில் அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் இயங்கி வரும் மதுபானக் கடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே இந்த மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் எதிா்ப்பு போராட்ட குழுத் தலைவா் மரியதாஸ் தலைமை வகித்தாா்.

இதில், குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவி சா்மிளா ஏஞ்சல், மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com