முத்தலக்குறிச்சியில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 07th July 2021 07:47 AM | Last Updated : 07th July 2021 07:47 AM | அ+அ அ- |

முத்தலக்குறிச்சி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு முத்தலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சிம்சன் தலைமை வகித்தாா். கல்குறிச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் ரமேஷ், திக்கணங்கோடு ஊராட்சித் தலைவா் அருளானந்த ஜாா்ஜ், திமுக பிரதிநிதி ரிமோமனோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். திக்கணங்கோடு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் ஷொ்லி ஜாண் தலைமையில் செவிலியா்கள் மக்களுக்கு தடுப்பூசி போட்டனா். இதில் ஊராட்சி துணைத் தலைவா் கலா, ராஜேந்திராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கரோனா பரிசோதனை: தக்கலை பகுதிகளில் பொது முடக்கம் தளா்வுகளுக்கு பின்னா் இயங்கும் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடி உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு அதிகளவில் மக்கள் வரத் தொடங்கியுள்ளனா். இதையடுத்து பத்மநாபபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜாராம் ஆலோசனையின்பேரில், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு கோதநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதில், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம், தூய்மைப் பணி அலுவலா் சோபியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.