பத்மநாபபுரத்தில் லோக் அதாலத்:13 வழக்குகளில் ரூ. 1.55 கோடி இழப்பீடு

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் முகாமில் 13 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 1.55 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.
பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமரச தீா்வு முகாமில் பங்கேற்றோா்.

தமிழகத்தில் கரோனா தொற்றும் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தமிழக நீதிமன்றங்களில் லோக் அதலாத் முகாம் நடைபெற்றது. தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சட்டப்பணிக்குழு தலைவரான சாா்பு நீதிபதி சாமுவேல்பெஞ்சமின்

தலைமை வகித்தாா். குற்றவியல் நடுவா்மன்ற நீதிபதி தீனதயாளன் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதில் 13 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, ரூ. 1 கோடியே 55 லட்சத்து 46,407 வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. முகாமில், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சுந்தா்சிங், வழக்குரைஞா்கள் ஆல்வின் வேதமணி, ராஜேஸ்வா், அசோக், ராஜசேகா், ஜாண் இக்னேசியஸ், ராபின்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com