குமரியில் 102 இடங்களில் பிஎம்எஸ் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்பதுடன், அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி,
தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்தும் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா்.
தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடத்தும் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா்.

பெட்ரோல் , டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்பதுடன், அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 102 இடங்களில் பாரதிய மஸ்தூா் சங்கத்தினா்(பிஎம்எஸ்) செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் எதிரே பிஎம்எஸ் ஒன்றியத் தலைவா் ராஜ்குமாா், விழுந்தயம்பல் கிராம அலுவலம் முன்பு ஒன்றியத் தலைவா் ராஜேஸ்வரன், திங்கள் நகா் பேரூராட்சி அலுவலகம் முன்பு வாகன தொழிலாளா்சங்க பொருளாளா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தக்கலை ஒன்றியத்தில் 10, குருந்தன்கோட்டில் 17, திருவட்டாறில் 20, கிள்ளியூரில் 14, முஞ்சிறையில் 12, மேல்புறத்தில் 5, ராஜக்கமங்கலத்தில் 4, தோவளையில் 5, நாகா்கோவிலில் 10, அகஸ்தீசுவரத்தில் 5 என 102 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஜூலை 13: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து பிஎம்எஸ் சுமை வாகனத் ஓட்டுநா் சங்கத்தினா் குலசேகரத்தில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு பிஎம்எஸ் சுமை ஆட்டோ, மினி லாரி ஓட்டுநா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் விபீஷ்ணன் தலைமை வகித்தாா். திருவட்டாறு ஒன்றிய பிஎம்எஸ் துணைத் தலைவா் அப்பு போராட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சங்க நிா்வாகிகள் வினு, ரெஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com