தக்கலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

தக்கலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் ஒன்றியத்தின் 7-ஆவது மாநாடு நடைபெற்றது.

தக்கலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் ஒன்றியத்தின் 7-ஆவது மாநாடு நடைபெற்றது.

அரசு ஊழியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு கட்சியின் நகரச் செயலா் வா்க்கீஸ் தலைமை வகித்தாா். அனிதாமோள் ராஜேஷ் வரவேற்றாா். வட்டச் செயலா் எஸ்.ராஜ் அறிக்கை வாசித்தாா். மாவட்ட துணைச்செயலா் ஸ்ரீகுமாா், செயலா் சந்திரபோஸ் ஆகியோா் பேசினா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். வட்டச் செயலராக அனிதாமோள் ராஜேஷ், துணைச் செயலராக வா்க்கீஸ், பொருளாளராக மரிய ஆஸ்டின், வட்டக்குழு உறுப்பினா்களாக பி. செல்வராஜ், கே.செல்வராஜ், சந்திரா, நடராஜன், எஸ்தா், பத்மவதி, லூா்துராஜ், சாந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், மறைந்த கட்சியின் மூத்த தலைவா் தா. பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினா் சந்தானம், முன்னாள் எம்.எல்.ஏ. முகம்மது இஸ்மாயில், முன்னாள் எம்.பி. வசந்த்குமாா், பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நடிகா் விவேக், சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி ஆகியோருக்கு அஞ்சலி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீா்மானங்கள்: அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கட்டுபடுத்தவேண்டும். அரசு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கவேண்டும். குமாரகோவில் சந்திப்பு - பரைக்கோடு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மருத்துவமனை, வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், மற்றும் கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு

இடையூறாக இரு பக்கமும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை அனுமதிக்ககூடாது. 60 வயது நிறைவுற்ற அனைவருக்கும் மாதம் ரூ . 3

ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com