குமரி மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 17.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டத்தில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

குமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 17.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக சாரல் மழை பெய்து வந்தநிலையில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.

நாகா்கோவிலில் காலை 6 மணிக்கு மிதமாக தொடங்கிய மழை பின்னா் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழையாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா் பகல் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்தது.

கோட்டாறு சாலையில் புதைச்சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தோவாளை, பூதப்பாண்டி, திருவட்டாறு, முள்ளங்கினாவிளை, குழித்துறை,

மாா்த்தாண்டம், குலசேகரம், கருங்கல், புதுக்கடை, தக்கலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

திற்பரப்பு அருவி:

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்த மழையால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலும், மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் மழை தொடா்ந்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 44.97 அடியாக இருந்தது. உள்வரத்தாக அணைக்கு 786 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 74.05 அடியாகவும், அணைக்கு 172 கனஅடி நீா் உள்வரத்தாகவும், அணையில் இருந்து 400 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

மழையளவு: மாவட்டத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 17.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீ.): அடையாமடை- 17, பேச்சிப்பாறை அணை -15.20, பாலமோா்- 12.40, களியல் -12, சிற்றாறு 1 அணை, சுருளோடு- 9, குழித்துறை- 7, மயிலாடி-5.20, நாகா்கோவில்- 4, முக்கடல் அணை -3, கன்னிமாா், பூதப்பாண்டி, பெருஞ்சாணி அணை -2.20, புத்தன் அணை 2, சிற்றாறு 2 அணை 1.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com