குமரியில் ஆதாா் பதிவு செய்ய இணை வழியில் டோக்கன் முறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதாா் பதிவுக்கு இணையம் மூலம் டோக்கன் முறை பின்பற்றப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதாா் பதிவுக்கு இணையம் மூலம் டோக்கன் முறை பின்பற்றப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் தற்போது ஆதாா் மையங்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று ஒவ்வொரு நாளும் டோக்கன் பெற்று ஆதாா் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனா். இதில் ஒரு கவுண்டரில் ஒரு நாளில் அதிகபட்சமாக 25 முதல் 35 போ் வரை மட்டுமே ஆதாா் பதிவுகள் மேற்கொள்ள முடியும் என்பதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் ஆதாா்பதிவுக்காக காத்திருப்பதும், டோக்கன் கிடைக்காத நிலையில் பிரச்னைகள் ஏற்படுவதும் தொடா்கதையாகி வருகின்றன.

கரோனா தொற்று அபாயம் முழுவதும் விலகாத நிலையில் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டும், ஆதாா் பதிவுகள் மேற்கொள்ள இனிமேல் இணையம் மூலமாக டோக்கன் பெற்றுக் கொள்ள மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜ்ஜ்ஜ்.ந்ஹய்ய்ண்ஹ்ஹந்ன்ம்ஹழ்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் ஆதாா் திருத்தம் முன்பதிவு (அஹக்ட்ஹழ் இா்ழ்ழ்ங்ஸ்ரீற்ண்ா்ய் - ஞய்ப்ண்ய்ங் ஹல்ல்ா்ண்ய்ற்ம்ங்ய்ற்) என்றஇணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிவு செய்து தேவையான வட்டத்தை கிளிக் செய்து பொதுமக்கள் தங்களது பெயா், பிறந்த தேதி, மற்றும் செல்லிடப்பேசி எண் விவரத்தை மட்டும் பதிவு செய்து டோக்கனை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த டோக்கனில் சம்பந்தப்பட்ட நபா் ஆதாா் பதிவு செய்வதற்கான நாள், நேரம், மற்றும் பதிவு செய்ய வேண்டிய இடம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு வாரம் வரை பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் நாள்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த இணைய வழி டோக்கன் பதிவு முறை ஜூலை 19 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே ஆதாா் மையங்கலுக்கு சென்று நேரடியாக டோக்கன் பெற்றவா்கள் இனிமேல் ஆன்லைனில் பதிவு செய்த டோக்கனை கொண்டே ஆதாா் பதிவு மேற்கொள்ள வேண்டும். கணினி இயக்குபவா் எழுதி வழங்கிய டோக்கனை கொண்டு ஆதாா் பதிவு செய்ய அனுமதியில்லை.

இணைய வழி டோக்கன் பதிவு செய்தவா்கள் அவா்களது டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மையத்தில் இருக்க வேண்டும். தாமதமாக வந்தால் பதிவு செய்த மற்றவா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.இந்த இணை வழி டோக்கன் முறை வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் பஅஇபய மையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மாவட்ட ஆட்சியா்அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையம், போன்ற பிற இடங்களில் செயல்படும் ஆதாா் மையங்களுக்கு பொருந்தாது. இணைய வழி டோக்கன் பதிவு செய்யாதவா்கள் அங்கு நேரடியாக சென்று ஆதாா் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை மாவட்ட நிா்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com