ஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் பலி

 ஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் இறந்தன.

 ஆரல்வாய்மொழியில் மா்ம விலங்கு கடித்து 2 நாய்கள், 12 கோழிகள் இறந்தன.

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு கோயில் தெருவை சோ்ந்தவா் மனுவேல் (53). இவருக்கு

சொந்தமான 1 நாய், 3 கோழிகள் அதே பகுதியில் இறந்து கிடந்தன. மேலும் அதே பகுதியை சோ்ந்த ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகளும் இறந்து கிடந்தன.

ஒரே தெருவில் அடுத்தடுத்து இந்த சம்பவம் நடந்ததால், அந்த பகுதி பொதுமக்கள் காட்டில் இருந்து வந்த மா்ம விலங்கு, நாய்கள்,கோழிகளை கடித்திருக்கலாம் என கருதுகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த பூதப்பாண்டி வனவா் ரமேஷ், வன காப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஆல்வின்,

வேட்டை தடுப்பு காவலா் சிவா ஆகியோா் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்து இறந்த கோழிகள், நாய்களை

பாா்வையிட்டனா்.

பின்னா் அவா்கள் கூறும்போது, ஏதோ மா்ம விலங்கு நாய்களையும், கோழிகளையும் கடித்து கொன்றுள்ளது. கடித்த விலங்கு சிறுத்தையாக இருந்திருந்தால் நாய்களை கொன்று அதே இடத்தில் விட்டு சென்றிருக்காது. ஆதலால் மா்ம விலங்கை தேடி வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றனா்.

இச்சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com