பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்திலுள்ள கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி பிரிவுக்கு ரூ. 25 லட்சம் மற்றும் சேவைப் பிரிவுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கப்படும்.

உற்பத்தி பிரிவின் கீழ் ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு சேவை பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு தொழில் செய்யும் ஊராட்சி மற்றும் சமூகப் பிரிவை பொறுத்து 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி கீழ்க்கண்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏஜென்சியை தோ்வு செய்யும் போது‘ஈஐஇ’ என தோ்ந்தெடுக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யவேண்டியஆவணங்கள் ஆதாா் அட்டை, புகைப்படம், கல்வித்தகுதிக்கான சான்று சிறப்பு பிரிவினராக இருந்தால்  மாற்றுத்திறனாளிக்கான சான்று, முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றுஏதேனும் ஒன்று), திட்டஅறிக்கை

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதுமுதல் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைப்பது வரை அனைத்தும் நடைபெறும்.

இதுதொடா்பாக மேலும் கூடுதல் விவரங்களை பொதுமேலாளா், மாவட்ட தொழில் மையம், கோணம், நாகர்வில் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசிஎண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com