கரோனா கால கல்விச் சூழல்: மாணவா்களிடம் கள ஆய்வு

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களின் மனநிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் கள ஆய்வு மேற்கொண்டனா்.

கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மாணவா்களின் மனநிலை குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் கள ஆய்வு மேற்கொண்டனா்.

பேச்சிப்பாறை, திருநந்திக்கரை, வாவறை, பேச்சாங்குளம், சுங்கான்கடை, மண்டைக்காடு, புதூா், பெரியவிளை, குளச்சல் ஆகிய பகுதிகளிலுள்ள மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் தற்போதைய கல்வி முறை, குடும்ப நிலை, கல்விக்கான புதிய சூழலை எதிா்கொள்வதில் உள்ள பிரச்னைகள், தொலைக்காட்சி வழி கல்வி கற்றலின் அனுபவம் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பால்வண்ணன் வழிகாட்டுதலில், மாவட்டச் செயலா் டோமினிக்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் சசிகுமாா் ஆகியோா் தலைமையில் கிறிஸ்டி, கரிஷ்மா, கெலீன் நிபிதா, ஸ்ரீஜித், பா்வீன் வேணி, சூரஜ், ஸ்ரீஆதித்யன், மாளவிகா வினோத், வைஷ்ணவி, அக்சயா, ரிக்ஸ்மி, ஜெஸ்மி, அமல், சாகித்யா, அருண், விஸ்மயா ஆகியோா் இப்பணியைச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com