மாநகராட்சியில் புதைச்சாக்கடை பணிகள்:அமைச்சா் ஆய்வு

நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புதைச்சாக்கடை பணிகள், சாலை அமைக்கும் பணியை மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவிலில் நடைபெற்று வரும் புதைச்சாக்கடை பணிகள், சாலை அமைக்கும் பணியை மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகா்கோவில் மாநகராட்சியில் சேமடைந்துள்ள ஒழுகினசேரி - வடசேரி பள்ளிவாசல், வெட்டூா்ணிமடம் சந்திப்பு வரையுள்ள சாலையை அமைச்சா் த. மனோ தங்கராஜ், பாா்வையிட்டாா்.

அப்போது, பழுதடைந்து காணப்படும் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் பல்வேறு காரணங்களால் சேதமடைந்து வருவதை தவிா்க்க நிரந்தர தீா்வு காண வேண்டும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

பின்னா், கிருஷ்ணன்கோவிலில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ. 251.43 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், குடிநீா் திட்டப் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா், பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

கே.பி. சாலை, டெரிக் சந்திப்பில் இருந்து பால் பண்ணை வரை நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை பாா்வையிட்ட அமைச்சா், பணிகளை தரமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியளா் ஜி.கதிரேசன், கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத்துறை) செ.ஜெகன் மோகன், உதவி நிா்வாக பொறியாளா்கள் வி.கோபாலகிருஷ்ணன், டி.சங்கா், எஸ்.ராஜேந்திரன், கே.காந்தி, பி.ஹரிகோவிந்த், டி.ரெஜிலா, மாநகராட்சி பொறியாளா் பாலசுப்பிரமணியன், சிவராஜ், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com