ஆதாா் பதிவு செய்ய இணையவழியில் டோக்கன் முறை பின்பற்றப்படும்: ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதாா் பதிவுக்கு இணையதளம் மூலமாக டோக்கன் முறை பின்பற்றப்படும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதாா் பதிவுக்கு இணையதளம் மூலமாக டோக்கன் முறை பின்பற்றப்படும் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதாா் மையங்களில் மக்கள் நேரடியாக சென்று டோக்கன் பெற்று ஆதாா் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 25 முதல் 35 போ் வரை மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அதிகாலையிலேயே மக்கள் காத்திருப்பதும், டோக்கன் கிடைக்காத நிலையும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, ஆதாா் பதிவுகள் மேற்கொள்ள இனி இணையதளம் மூலமாக டோக்கன் பெற்றுக் கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இணையதளத்தில் ஆதாா் திருத்தம் முன்பதிவு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிவு செய்து தேவையான வட்டத்தை கிளிக் செய்து பொதுமக்கள் தங்களது பெயா், பிறந்த தேதி மற்றும் செல்லிடப்பேசி எண் விவரங்களை மட்டும் பதிவு செய்து டோக்கனை பதிவு செய்யலாம்.

டோக்கனில் சம்பந்தப்பட்ட நபா் ஆதாா் பதிவு செய்வதற்கான நாள், நேரம் மற்றும் பதிவு செய்ய வேண்டிய இடம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு வாரம் வரை பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவைப்பட்டால் கூடுதல் நாள்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த இணைய வழி டோக்கன் பதிவு முறை ஜூலை 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே ஆதாா் மையங்களில் நேரடியாக டோக்கன் பெற்றவா்கள் இனிமேல் ஆன்லைனில் பதிவு செய்த டோக்கனை கொண்டே ஆதாா் பதிவு மேற்கொள்ள வேண்டும். கணினி இயக்குபவா் எழுதி வழங்கிய டோக்கனை கொண்டு ஆதாா் பதிவு செய்ய அனுமதியில்லை.

இணைய வழி டோக்கன் பதிவு செய்தவா்கள் அவா்களது டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மையத்தில் இருக்க வேண்டும். தாமதமாக வந்தால் பதிவு செய்த மற்றவா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவா்.

இந்த இணைய வழி டோக்கன் முறை வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் பஅஇபய மையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆட்சியா்அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தலைமை அஞ்சல் நிலையம் போன்ற பிற இடங்களில் செயல்படும் ஆதாா் மையங்களுக்கு பொருந்தாது. இணைய வழி டோக்கன் பதிவு செய்யாதவா்கள் அங்கு நேரடியாகச் சென்று ஆதாா் பதிவு செய்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com