கேரளத்துக்கு வேனில் கடத்த முயன்ற 1050 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

நித்திரவிளை அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,050 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

நித்திரவிளை அருகே வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,050 லிட்டா் மண்ணெண்ணெயை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மீனவா்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெயை, பயணியரை ஏற்றிச் செல்லும் வேனில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதாக நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு தலைமை காவலா் ஜோஸ் தலைமையில் போலீஸாா் நித்திரவிளை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த தனியாா் வேனை நிறுத்த சைகை காட்டினா். வேன் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து சென்றனா்.

இதையடுத்து சிறிது தொலைவில் வேனை நிறுத்திவிட்டு வேன் ஓட்டுநா் தப்பிச் சென்றுள்ளாா். தொடா்ந்து வேனை சோதனை செய்த போது அதில் 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 1,050 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது தெரிந்தது.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து வேனுடன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com