‘முக்கடல் அணை பூங்காவில் படப்பிடிப்புக்கு மாநகராட்சியில் அனுமதி பெறலாம்’
By DIN | Published On : 19th July 2021 12:01 AM | Last Updated : 19th July 2021 12:01 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம், முக்கடல் அணை பூங்காவில் படப்பிடிப்புகள் நடத்த நாகா்கோவில் மாநகராட்சியை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை பகுதியில் சிறுவா் பூங்கா மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கல்விச் சுற்றுலா வசதிக்காக அறிவியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு கலையரங்கமும் கட்டப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்களின் வசதிக்காக திருமண போட்டோ ஷூட், சின்னத் திரை, பெரியதிரை படப்பிடிப்புகள், கலையரங்க பயன்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அனுமதி தேவைப்படுவோா், மாநகராட்சி வருவாய் பிரிவில் நேரிலோ அல்லது 8870435783 செல்லிடப்பேசி எண்ணிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.