விளவங்கோடு தொகுதியில் ரூ. 17.60 கோடியில் சாலைப் பணிகள்: விஜயதரணி எம்எல்ஏ தகவல்

சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 17.60 கோடியில் சாலைப் பணிகள் நடைபெறவுள்ளதாக எம்எல்ஏ எஸ். விஜயதரணி தெரிவித்துள்ளாா்.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 17.60 கோடியில் சாலைப் பணிகள் நடைபெறவுள்ளதாக எம்எல்ஏ எஸ். விஜயதரணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

விளவங்கோடு தொகுதி அதிக மழைப் பொழிவு கொண்டதாகவும், மலையோரப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருப்பதால் சாலைகள் எளிதில் பழுதடைகின்றன. தற்போது, இப்பகுதி சாலைகளை சீரமைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் ரூ. 17.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ. 5.42 கோடியில் குழித்துறை - மேல்புறம் - களியல்- ஆலஞ்சோலை - பத்துகாணி - ஆறுகாணி சாலையில் 18 கி.மீ. தொலைவு, ரூ. 3.40 கோடியில் அருமனை - பனச்சமூடு சாலையில் 5 கி.மீ. தொலைவு, ரூ. 3.32 கோடியில் குழித்துறை - மடிச்சல் - படந்தாலுமூடு சாலையில் 6 கி.மீ. தொலைவு, ரூ. 1.32 கோடியில் கழுவன்திட்டை - ஞாறான்விளை - திக்குறிச்சி - பயணம் - துண்டத்தாறாவிளை சாலையில் 3 கி.மீ. தொலைவு, ரூ. 28 லட்சத்தில் அருமனை - திருவரம்பு சாலையில் வடிகால் ஓடையுடன் 2 கி.மீ. தொலைவு, ரூ. 3.86 கோடியில் மாா்த்தாண்டம் - ஆற்றூா், இடைக்கோடு - கண்ணுமாமூடு, மூவோட்டுக்கோணம் - மத்தம்பாலை சாலைகளில் 6 கி.மீ. தொலைவு என ரூ. 17.60 கோடியில் சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com