இளைஞா்கள் சுய தொழிலுக்குகடன், மானியத் தொகை உயா்வு

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுய தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் மானிய தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுய தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் மானிய தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், அதன் மானியத்திற்கான உச்சவரம்பு ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது. சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்களுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்ததிட்டத்தில் பயனாளிகளுக்கு தொழில்முனைவோா் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தொழில்கடன் பெற விரும்பும் இளைஞா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ஹ்ங்ஞ்ல் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில்மையம், கோணம், நாகா்கோவில் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04652 260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com