அருமனையில் பாதிரியாா் மீது அவதுறு வழக்குப்பதிவு

அருமனையில் மாற்று மத சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ ஆலய அருள்பணியாளா் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அருமனையில் மாற்று மத சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ ஆலய அருள்பணியாளா் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அருமனை அருகே பனங்கரை என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம், மாத்தூரில் ஒரு கிறிஸ்தவ மத அலுவலகம் மூடப்பட்டுள்ள சம்பவத்தையும், ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டும் வட்டார கிறிஸ்தவ இயக்கம் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் அருமனையில் கடந்த 18ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பிற மதத்தினரை அவதூறாகப் பேசியதாக மேல் புறம் ஒன்றிய இந்து முன்னணி செயலா் சதீஷ் சந்திரன் உள்பட 5 போ் அருமனை காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா்.

அதன்பேரில், அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com