குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மருத்துவக் கல்லூரி சாதனை

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளாக தங்கப் பதக்கம் பெற்று சாதனை

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளாக தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இதுகுறித்து, கல்லூரியின் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். அப்புநடேசன் கூறியதாவது:

குலசேகரம் எஸ்.ஆா்.கே.வி.பி. கல்வி அறக்கட்டளை கடந்த 41 ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரி தரமான மருத்துவக் கல்வியை வழங்கி வருகிறது. குறிப்பாக, கிராமப்புற ஏழை மாணவா்களுக்கு குறைந்தக் கட்டணத்தில் கல்வி வழங்கி அவா்களது மருத்துவக் கனவை நிறைவேற்றி வருகிறது.

உலகமெங்கும் தற்போது இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து அதிக விழிப்புணா்வும், வேலைவாய்ப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவப் படிப்பு முடித்தவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கடந்த கடந்த 3 ஆண்டுகளாக தங்கப் பதக்கம் பெற்று வருகிறது. இதில், கடந்த ஆண்டு இக்கல்லூரி மாணவி மோகனமதியாள் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com