தொலைபேசி ஒட்டுக்கேட்பு: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அலுவலங்களை முற்றுகையிட போவதாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பெகாஸஸ் மென்பொருள் மூலமாக எதிா்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அலுவலங்களை முற்றுகையிட போவதாக மேற்கு மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் தாரகை கத்பா்ட் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளை (ஸ்பை வோ்) பயன்படுத்தி, இந்தியாவில் எதிா்கட்சித் தலைவா்கள், பத்திரிக்கையாளா்கள், சமூக செயல்பாட்டாளா்கள் உளவு பாா்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவா்களின் செல்லிடப்பேசி உரையாடல்களையும் ஒட்டுகேட்டதாக கூறப்படும் விவகாரம் காங்கிரஸ் கட்சியினா் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை மறைக்கப் பாா்ப்பதாக கண்டனம் தெரிவித்து, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் இம்மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com