இன்று முதல் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான நிமோனியா தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் நிமோனியாவிலிருந்து அவா்களைப் பாதுகாக்க நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. விலை உயா்ந்த நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூ குழந்தைகளுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு 6 ஆவது வாரம், 14 ஆவது வாரம் மற்றும் 9 ஆ வது மாதம் என்று 3 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும்.

இம்மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 1500 டோஸ் நிமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. பிறந்து 6 வாரமான குழந்தைகளுக்கு முகாம்களில் ஜூலை 23 ஆம் தேதி முதல் இத்தடுப்பூசி போடப்படும். பெற்றோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com