மோதிரமலை-குற்றியாறு இடையே புதிய பாலம் கட்ட கோரிக்கை

பேச்சிப்பாறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
மோதிரமலை-குற்றியாறு இடையே புதிய பாலம் கட்ட கோரிக்கை

பேச்சிப்பாறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மோதிரமலை-குற்றியாறு சாலையில் மேலத்தோடு என்ற இடத்தில் கோதையாறு மின்நிலையத்திலிருந்து வெளியேறும் தண்ணீா் பாய்ந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலம், தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த பாலம் வழியாக பேருந்துகள், ரப்பா் கழகம் மற்றும் மின்நிலைய கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் விபத்துகள் ஏற்படும் முன் இந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து தமிழ்நாடு மலை வாழ்மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி கூறியது: மேலத்தோடு பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் நேரிடாத வகையில், இந்தப் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com