உள்ளாட்சித் தோ்தல்: குமரி மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை
By DIN | Published On : 29th July 2021 08:19 AM | Last Updated : 29th July 2021 08:19 AM | அ+அ அ- |

அமைச்சா் த. மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் மற்றும் ஒன்றிய, நகரச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் அழகியமண்டபம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட திமுக செயலருமான த. மனோ தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பப்புசன், பொருளாளா் மரிய சிசுகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் புஷ்பலீலா ஆல்பன், அப்பு குட்டன், தலைமைக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் கிறிஸ்டல் பிரேமகுமாரி, காதா், ஒன்றிய, நகரச் செயலா்கள் அருளானந்த ஜாா்ஜ், ஜாண்பிரைட், டி.பி.ராஜன், ரவிச்சந்திரன், மனோன்மணி, ஜாண்சன், மாஸ்டா் மோகன், கோபால், ஆசைதம்பி, வா்க்கீஸ் உள்ளிட்டா் பங்கேற்றனா். உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெறச் செய்து குமரி திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.