களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிய 6 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கொண்டு சென்ற 6 டிப்பா் லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளையில் அதிக பாரம் ஏற்றிய 6 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கொண்டு சென்ற 6 டிப்பா் லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

குமரி மாவட்டம் வழி கேரளத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ராட்சத பாறைக்கல், ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தடுக்க தனி வட்டாட்சியா் தலையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரு நாள்களுக்கு முன் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சிந்தாமணி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலையில் அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதிக பாரத்துடன் பாறைக்கல் உள்ளிட்டவற்றை ஏற்றி வந்த 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com