தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 29th July 2021 08:24 AM | Last Updated : 29th July 2021 08:24 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வழக்குரைஞா் சிவகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் பி.பால்ராஜ் முன்னிலை வகித்தாா். மகளிா் அணித் தலைவி சரோஜம், நிா்வாகிகள் பத்மசீலன், ஜீவானந்தம், பிரபாகா், ராஜன், இம்மானுவேல், முத்தம்மாள், புஷ்பம், முத்துகிருஷ்ணன், ஸ்டீபன், ஐய்யாபிள்ளை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ‘அரசு வேலை வாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்; உள்ளாட்சி தோ்தலில் தலித் மக்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதிக இடங்களை அரசு ஒதுக்கித்தர வேண்டும்; பத்மநாபபுரம் இலுப்பகோணம் அருகேயுள்ள பட்டாணி குளத்தில் பக்கச்சுவா் கட்டி சீரமைத்து தரவேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.