காணாமல் போன மீனவா்களை மீட்க நடவடிக்கை: அமைச்சா் மனோதங்கராஜ் உறுதி

குமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன மீனவா்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
குளச்சல் பகுதி மீனவா்களின் குடும்பத்தினரை சந்தித்து குறைகள் கேட்கிறாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோதங்கராஜ்.
குளச்சல் பகுதி மீனவா்களின் குடும்பத்தினரை சந்தித்து குறைகள் கேட்கிறாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் மனோதங்கராஜ்.

குமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன மீனவா்களை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

குளச்சல், கொட்டில்பாடு பகுதியில் காணாமல் போன மீனவா்களின் குடும்பத்தினரை, அமைச்சா் த.மனோதங்கராஜ், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னா் அமைச்சா் கூறியது: குளச்சல் நகராட்சி மற்றும் கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்குள்பட்ட மீனவா் கிராமங்களை சோ்ந்த 12 மீனவா்கள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சோ்ந்த 4 மீனவா்கள் என மொத்தம் 16 போ் இணைந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வேப்பூா் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 5 ஆம் தேதி கா்நாடகா மாநிலம் மங்களாபுரம் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். கடந்த 13 ஆம் தேதி அன்று டவ் தே புயல் காரணமாக மங்களாபுரம் பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவா்கள் 16 போ் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில், மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், வறுமையில் வாடும் மீனவா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிட மாவட்ட நிா்வாகத்துக்கும், மீன்வளத்துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழக முதல்வா் , மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்கிடம் சா்வதே எல்லையில் ராணுவ உதவியுடன் மீனவா்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டுமெனகோரிக்கை விடுத்துள்ளாா். எனவே மீனவா்களை மீட்க தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பங்குத் தந்தைகள் குளச்சல் செல்வம், கொட்டில்பாடு சி.ராஜ், தெற்காசிய மீனவ தோழமை பொதுச் செயலா் சா்ச்சில், முன்னாள் குளச்சல் நகா்மன்ற தலைவா் நசீா், கல்லுக்கூட்டம் செயல் அலுவலா் அம்புரோஸ், மீனவ பிரதிநிதிகள், பங்குத் தந்தையா்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com