'மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கேரள நம்பூதிரிகளை வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும்'

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் கேரள மாநில நம்பூதிரிகளை கொண்டு பரிகார பூஜைகள் செய்து தங்க மேற்கூரை அமைக்க வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து தீ விபத்து பாதிக்கப்புகளை பார்வையிட்ட பாஜக தலைவர் எல்.முருகன்.
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து தீ விபத்து பாதிக்கப்புகளை பார்வையிட்ட பாஜக தலைவர் எல்.முருகன்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் கேரள மாநில நம்பூதிரிகளை கொண்டு பரிகார பூஜைகள் செய்து தங்க மேற்கூரை அமைக்க வேண்டும் என்றார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் புதன்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தால் கோயிலில் அம்மன் சன்னதி கருவறையின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வியாழக்கிழமை காலை மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலுக்கு வந்து தீ விபத்து பாதிக்கப்புகளை பார்வையிட்டார். 

காவல்துறை அதிகாரி களிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன் கூறும் போது, பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் நேரிட்ட தீ விபத்துக்கு அறநிலையத்துறையின் அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமான அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சேதமடைந்த அம்மன் சன்னதி மேற்கூரையை அகற்றி சபரிமலை அய்யப்பன் கோயிலை போன்று கேரள முறைப்படி தங்கத்தால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இந்த கோயிலின் ஆகம விதிகளின்படி கேரள நம்பூதிரிகளை வைத்து பிரசன்னம் பார்த்து பரிகார பூஜை களை மேற்கொள்ள வேண்டும். தீ விபத்து குறித்து காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் விசாரணை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com