பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் 4,200 கனஅடி உபரிநீா் திறப்பு

மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து சனிக்கிழமை விநாடிக்கு 4,244 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து சனிக்கிழமை விநாடிக்கு 4,244 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதற்கிடையே, இம்மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடா்ந்து பெய்து வருவதாலும், அணைகள் நிரம்பி வருகின்றன. பாசனக்குளங்களும் நிரம்பி வருகின்றன.

மேலும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீா் தேவை இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் திறக்கப்பட்ட பேச்சிப்பாறை அணை மாலையில் மூடப்பட்டது.

உபரிநீா் திறப்பு: மழையின் காரணமாக அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 2,263 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. அணையின் நீா்மட்டம் 44.06 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 761 கனஅடி நீா்வரத்து இருந்தது.

பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 1,981 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீா்மட்டம் 74.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 836 கனஅடி நீா்வரத்து இருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.30 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.40 அடியாகவும் இருந்தது.

வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கோதையாறு, பரளியாறு மற்றும் தாமிரவருணி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடா்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுப்பணித்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com