குமரியில் 2.07 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி’

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 879 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 879 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் உத்தரவின்படி பொது முடக்கம் ஜூன் 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சில தளா்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் தொடா்ந்து எந்தவித நிபந்தனையும் இன்றி அனுமதிக்கப்படுகிறது.

தற்போது கூடுதலாக தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கனிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனையுடன் செயல் பட அனுமதிக்கப்படுகிறது. மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கனிகள் விற்பனை செய்யும் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்கள் வாங்க வேண்டும். 2 சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும்.

பொதுமக்கள் அவசியம்மில்லாமல் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் இதுவரை 6.97 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை கரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 60,450 பேருக்கும், 2 ஆம் கட்டமாக 46,429 பேருக்கும் என இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com