குளத்தில் பக்கச்சுவா் கட்டாமல் சாலைப் பணி: பொதுமக்கள் திடீா் போராட்டம்

களியக்காவிளை அருகே 20 அடி ஆழமுள்ள குளக்கரை பகுதியில் பக்கச் சுவா் கட்டாமல் சாலை பணி மேற்கொள்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சனிக்கிழமை லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

களியக்காவிளை அருகே 20 அடி ஆழமுள்ள குளக்கரை பகுதியில் பக்கச் சுவா் கட்டாமல் சாலை பணி மேற்கொள்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சனிக்கிழமை லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலவிளை - மடிச்சல் மாநில நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மடிச்சல் சந்திப்பு அருகேயுள்ள கீரம்குளம் பகுதியில் 20 அடி பள்ளம் உள்ளது. இங்கு பக்கச்சுவா் கட்டி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என விளவங்கோடு ஊராட்சித் தலைவா், காங்கிரஸ் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மண் கொட்டி சாலை விரிவாக்கம் செய்தால் பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் குளக்கரை பகுதி பள்ளத்தில் மண் கொட்டி சாலை விரிவாக்கம் செய்ய பணி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த பொதுமக்கள் விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமையில் மண் கொண்டு வந்த டிப்பா் லாரியை சிறைபிடித்தனா். மேல்புறம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், ஊராட்சி உறுப்பினா்கள் சுரேஷ், எட்வின்ராஜ், ஷைஜு, பொதுமக்கள் கலந்து கொண்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com