வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டம்

மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சட்ட நகலை எரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சட்ட நகலை எரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தக்கலை வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டன்கோணத்தில் தக்கலை வட்டாரச் செயலா் சுஜாஜாஸ்பின், தனது வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டாா். இதில் கிருஷ்ணலதா, சந்திரா உள்பட பலா் பங்கேற்றனா். திருவிதாங்கோடு, கண்டன்விளை ஈத்தவிளை, புங்கரை, செம்பருத்திவிளை, பத்மநாபபுரம், வட்டம், முட்டைக்காடு உள்பட பல்வேறு இடங்களில் அக்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கட்சியின் நிா்வாகிகள் ராஜன், தேவதாஸ், பீட்டா் அமலதாஸ், மோகனதாஸ், ஜாண்செளந்தரராஜ், காளிபிரசாத், கோலப்பன், ராஜன், ஜாண் இம்மானுவேல், ஷீலா பெனட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com