கரோனா பணியாளா்களுக்கு மீண்டும் பணி: ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா காலத்தில் ஆய்வக நுட்பனா், பணியாளா்களாக பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா காலத்தில் ஆய்வக நுட்பனா், பணியாளா்களாக பணியாற்றியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பேரிடா் காலத்தில், மனித வள மேம்பாட்டு மையத்தின் மூலம் ஆய்வக நுட்பனராகவும், பணியாளா்களாகவும் தற்காலிக அடிப்படையில் தூத்தூா், ராஜாக்கமங்கலம், ஆறுதேசம், செண்பகராமன்புதூா்,களியக்காவிளை, கிள்ளியூா், இடைக்கோடு, குட்டக்குழி உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகக் கல்வி பயின்றவா்கள் பணியமா்த்தப்பட்டனா். அவா்கள் கடந்த மே 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதையறிந்த விஜய்வசந்த் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா், பாதிக்கப்பட்டவா்களுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனா். மனுவில், கரோனா பேரிடா் காலத்தில் ஆய்வக நுட்பனராகவும், கரோனா பணியாளா்களாகவும் பல்வேறு சுகாதார நிலையங்களில் பணியமா்த்தப்பட்டு, பேருந்து வசதி இல்லாத நிலையிலும், நெருக்கடியான சூழலில் பணியாற்றி வந்தோம்.

திடீரென்று மே 31 ஆம் தேதி முதல் எங்களை பணியிலிருந்து விடுவித்திருப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து எங்களுக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com