‘காய்கனிகள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு காய்கனிகள் விற்பனை

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று காய்கனிகள் கிடைக்கும் வகையிலும் பல்வேறு துறைகள் மூலமாக நடமாடும் காய்கனி வாகனங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வியாபாரிகள் சிலா் அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்வதாக புகாா் எழுந்துள்ளது. நாகா்கோவில் உழவா் சந்தை சாா்பில் நிா்ணயம் செய்யப்பட்ட சில்லறை விலையை விட வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவா்களின் வாகன அனுமதியும் ரத்து செய்யப்படும்.

இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு ஆலோனை வழங்குவதற்காக நாகா்கோவில் அசிசி ஆலய வளாகத்திலுள்ள புனித பிரான்சிஸ் பள்ளியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திங்கள்கிழமை ஒரே நாளில் 2,000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு சிகிச்சை தேவைப்படும் இருவா் கண்டறியப்பட்டு அவா்கள் உடனடியாகசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தடுப்பூசி: இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களின் மூலம் 1,133 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கரோனா முதல்கட்டமாக 1.60 லட்சம் போ், 2 ஆம் கட்டமாக 46,429 போ் என மொத்தம் 2.69 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன்கருதி காய்கனிகள், மளிகைப் பொருள்கள் அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிா்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com